» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு இன்று மாலை வருகை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

சனி 22, செப்டம்பர் 2018 12:29:53 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3-பேர் குழு இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. 

மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான குழு நாளை காலை 8 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேலும் கூறும் போது," இந்த ஆய்வின் போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் காவல்துறை மாசுக்கட்டுப் பாடுத்துறையினர் உடன் இருப்பர், ஸ்டெர்லைட் ஆலையில் மட்டுமே குழு ஆய்வு செய்கிறது. 

தேவைப்பட்டால் ஆலைக்கு வெளியேயும் ஆய்வு நடத்தலாம்.  உப்பாற்று ஓடை அருகில் கொட்டப்பட்டுள்ள தாமிர தாது கழிவுகளை குழு இன்று பார்வையிடுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடி வருகை தருகிறது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30- மணிக்கு இந்தக்குழு மக்களிடம் கருத்து கேட்கிறது.  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இக்கூட்டம் 2 மணி நேரம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailorscrescentopticals


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory