» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு கனிமொழி கடிதம்

சனி 22, செப்டம்பர் 2018 12:14:35 PM (IST)

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் நகரிலுள்ள முத்தாரம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. குலசேகர பட்டினத்திற்கும் விண்ணியல் ஆய்விற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமத்திய ரேகை அருகேயுள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், பெரும் செலவு மிச்சமாகும், பலன் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கோரி, அப்பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, திமுக எம்.பி. கனிமொழி இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து, 2013ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளேன். பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketingcrescentopticals

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory