» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை மூலப்பொருட்களை அகற்ற 10 நாள் அனுமதி : துாத்துக்குடி ஆட்சியர்

வெள்ளி 21, செப்டம்பர் 2018 7:51:32 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள உற்பத்தி மூலப் பொருட்களை அகற்ற நாளை முதல் 10 நாட்கள்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்துாரி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பொதுமக்களின் போராட்டத்தால் ஸ்டெர்லைட் ஆலை  சீல் வைத்து மூடப்பட்டது . பின்பு  அங்குள்ள சல்பரிக் ஆசிட் , பாஸ்பரிக் ஆசிட் , பெட்ரோலிய பொருட்கள் ஆகிய அமிலங்களை அகற்ற அனுமதி அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 10 2018 வரை சுமார் 90 சதவிதம் முடிவடைந்து உள்ளது . அதை தொடர்ந்து  தாமிர உற்பத்திக்கு தேவையான தாமிர பரிவு கொண்ட கலவைகள் ,ராக்பாஸ்பேட் ,சிப்செம் ஆகிய பொருட்கள் அதிக அளவு இருக்கிற காரணத்தால் அகற்ற படாமல் இருந்து வருகிறது .

தாமிர பரிவு கொண்ட கலவை(copper considerate) மட்டும் 90000 கனமீட்டர் இருக்கிறது .இதில் 30 சதவிதம் சல்பர்,  மாய்சர் 10 சதவிதம் இருப்பதால் எளிதில் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாலும் அதை அகற்ற என்ஜிடி 30.08.2018 அறிக்கையின் படியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அறிக்கையின் படியும் நமது நிர்வாக மேற்பார்வையில் நாளை முதல் 10 நாட்களுகு்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்தார் .


மக்கள் கருத்து

publicSep 23, 2018 - 01:42:32 AM | Posted IP 172.6*****

this factory never open again, in dream also never happen.. if possible approach some other galaxy, our Tuticorin people want live good health...

RajaSep 22, 2018 - 03:12:01 PM | Posted IP 162.1*****

Reopen sterlite and save thousands livelihood.

m rajSep 22, 2018 - 01:09:39 AM | Posted IP 162.1*****

please dismantle this factory from at our Tuticorin soil , hope goverment will take necessary action at earliast we want breath hygienic quility Air....!!! quick action highly appriciated by Tuticorin people Thanks a lot...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Thoothukudi Business Directory