» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:11:37 PM (IST)தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி,மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். 

மேலும், தூத்துக்குடி சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதிமுக மகளிர் அணி செயலளார் குருத்தாய் தலைமையில் மகளிர் அணியினர் 500பேர் கும்பம் ஏந்தி வரவேற்பு அளித்தனர். சென்டை மேளம் முழங்க கிராமிய கலைஞர்கள் நாட்டுப்புற இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். முதல்வருக்கு வழி நெடுக அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors

Joseph Marketing

Thoothukudi Business Directory