» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கமணி பேட்டி

வெள்ளி 21, செப்டம்பர் 2018 3:20:25 PM (IST)தமிழகத்தில், பொது மக்களுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி  இன்று  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அம்மா முதலமைச்சராக இருந்தபோதும், தற்போதும் தமிழநாடு மிகை மின் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து, மின் உற்பத்தி தேவையைவிட கூடுதலாகவே உள்ளது. சோலார் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் இருந்ததால், தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 5 யூனிட்களில் 4 யூனிட்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. 1 யூனிட் நிறுத்தப்பட்டிருக்கிறது. நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறுவது தவறான தகவலாகும். 

1 இலட்சத்து 2000 மெட்ரிக் டன் நிலக்கரி தற்போது இருப்பில் உள்ளது. இது 6 நாட்களுக்கு தேவையானதாகும். மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மழையின் காரணமாக வரவேண்டிய நிலக்கரி தாமதமாக அனுப்பப்பட்டுள்ளது. தினந்தேர்றும் 16000 மெட்ரிக் டன் அளவு தான் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை பொறுத்தவரை போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதால் மின் உற்பத்தியில் எவ்வித தடையும் ஏற்படாது. தமிழகத்தில், பொது மக்களுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், உடன்குடி, வடசென்னை, எண்ணூர் விரிவாக்கம் ஆகிய பகுதியில் மொத்தம் 4000 மெகாவாட் அனல் மின்நிலையங்கள் 2022ம் ஆண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது. 

உடன்குடி பகுதியில் அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி கொண்டு வரும் தலம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் பொது மக்களின் அனுமதி பெற்ற பிறகு தான் பணிகள் தொடங்கப்படும். எதிர்காலத்தில் மக்களுக்கு மின் தேவையை கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக திகழும் என அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின்போது, தூத்துக்குடி அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் நடராஜன் மாவட்ட மின்சாரவாரிய கண்காணிப்பு பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், மேற்பார்வை பொறியாளர்கள் பக்தவசலம், சுல்தான், கணேசன், ஜோஸன் பின் புளோரா, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamJoseph Marketing

New Shape Tailors

Anbu Communications

Black Forest CakesCSC Computer EducationThoothukudi Business Directory