» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இறக்குமதி செய்த வெளிநாட்டு மணல் : இன்று மாலை முதல் விற்பனை

வெள்ளி 21, செப்டம்பர் 2018 1:37:26 PM (IST)

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனை இன்று மாலை முதல் தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று மாலை 4 மணி முதல் விற்பனைக்கான முன் பதிவு தொடங்கப்பட உள்ளது. இந்த மணலை TNsand இணையதளத்திலும், செல்போன் ஆப் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முதல்கட்டமான துறைமுகத்தில் 11,000 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளது. 

எனவே முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தற்போது முன்பதிவு செய்து விட்டால், அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும். TNsandல் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். ஏற்கனவே மணல் விலை குறித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு யூனிட்(சுமார் 4.5 MT) மணல் ரூ.9,990 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Joseph Marketing

Anbu Communications

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education

Thoothukudi Business Directory