» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1.02 லட்சம் டன் நிலக்கரி இருப்பு: அமைச்சர் தங்கமணி பேட்டி

வெள்ளி 21, செப்டம்பர் 2018 12:29:31 PM (IST)தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் மின் உற்பத்தியில் தூத்துக்குடி அனல் மின்நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தபப்ட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் 6 நாட்கள் வரை மின்உற்பத்தி செய்வதற்கு போதுமான நிலக்கரி உள்ளதாகவும், மின்தேவை குறைந்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மின்வாரிய அமைச்சர் தங்கமணி இன்று காலை தூத்துக்குடி அனல் மின்நிலையத்த்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவருடன் அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் நடராஜன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர். இதைத்தொடர்ந்து, தடையின்றி மின்உற்பத்தி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கமாறு அமைச்சர் தங்கமணி ஆலோசனைகளை வழங்கினார்.தொடர்ந்து நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனல்மின் நிலையத்தில் 1.02 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளதாக தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


New Shape Tailors


CSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory