» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவை அழிக்கும் மூவர் அணி : சண்முகநாதன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

வியாழன் 20, செப்டம்பர் 2018 5:06:19 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு,  மாவட்ட செயலாளர் சி.த.செல்லபாண்டியன், சின்னத்துரை ஆகிய மூவரால் அதிமுக அழிந்து வருவதாக சண்முகநாதன் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தலில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுகவினர் இரு அணிகளாக போட்டியிட்டனர். இதில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் அணி வெற்றி பெற்றதாக தகவல் வெளியான நிலையில், வெற்றி பெற்றவர்களை மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் அணியினர் கடத்த துவங்கி உள்ளதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மேலும் அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: முதல்வரும், துணை முதல்வரும் ஆட்சியை நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். கட்சியை நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை. 

ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் ஆலோசகராகவும், எடப்பாடி தரப்பில் தளவாய்சுந்தரம் ஆலோசராக செயல்படுகிறார்கள். இவர்கள் இருவரும் கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை நான் முதல்வரிடமும் துணை முதல்வரிடம்  தெரியப்படுத்தியும், கட்சியை நடத்த கவனம் செலுத்தவில்லை. இதுகுறித்து யாரிடம் முறையிட்டாலும் கேட்கப்போவதில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஆனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி  ஆகிய மூன்று மாவட்டங்களில்  கட்சி அழிவுப் பாதைக்கு செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொண்டர்கள் எங்கே இருக்கிறார்கள்? தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு,  மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மற்றும் கழக அமைப்புச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்ட சின்னத்துரை இம்மூவரும் கட்சியை அழித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினரே எடப்பாடி மற்றும் ஓபிஏஸ் தலைமையை குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Joseph Marketing
Thoothukudi Business Directory