» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்று எரிபொருட்களை கண்டுபிடிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: விழிப்புணர்வு போட்டியில் அறிவுறுத்தல்!!

வியாழன் 20, செப்டம்பர் 2018 4:16:46 PM (IST)மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக முக்காணி பள்ளியில் விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. 

மத்திய அரசின் பெட்ரோலிய சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில், எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, முக்காணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த ஒவியப் போட்டியில் பல்வேறு மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சிஎம் எண்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் ஆனந்த் பரிசுகள் வழங்கி பாராட்டினார். 

பின்னர், அவர் பேசுகையில், எரிபொருள் தவிர்க்க முடியாத பொருள் ஆகி விட்டது. அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதேசமயம்,மாற்று எரிபொருட்களை கண்டுபிடிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  நிகழ்ச்சியில் சிஎம் எண்டர்பிரைஸஸ் மேலாளர் பிரம்மநாயகம், பள்ளி தலைமை ஆசிரியைகள் கேத்தரின், வசந்தகுமாரி, ஆசிரியர் பேச்சிமுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் சங்கரநாராயணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் லெ. வேலாயுதம் மற்றும் ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

TrueSep 20, 2018 - 10:38:21 PM | Posted IP 162.1*****

Two

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications


Joseph MarketingNalam PasumaiyagamThoothukudi Business Directory