» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசு சார்பில் தொழில் மாதிரி பயிற்சி முகாம் : தூத்துக்குடியில் 26-ம் தேதி துவங்குகிறது

வியாழன் 20, செப்டம்பர் 2018 1:37:13 PM (IST)

தமிழக அரசு மற்றும் துடிசியாவும் இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி தூத்துக்குடியில் 26-ம் தேதி துவங்குகிறது என ஆட்சியர் சந்திப்நந்துாரி அறிவித்துள்ளார்

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, துாத்துக்குடியில் தமிழக அரசு மற்றும் துடிசியாவும் இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் தொழிலின் வகைகள், தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தொழில் துவங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடல், சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நவீன தொழில் நுட்பங்கள் போன்றவை நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய 8-ம் வகுப்பு முடித்த தொழில் ஆர்வம் உள்ள ஆண்-பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி 26.09.2018 துவங்கி 06.10.2018 வரை 10 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.1000 - மட்டும். பயிற்சி நடைபெறும் இடம்: தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் (துடிசியா)அரங்கம் 4/158, ராம் நகர் (கேடிசி டிப்போ அருகில்) எட்டையபுரம் ரோடு, தூத்துக்குடி-2. இந்தத் தகவலை துடிசியா தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியின் இறுதியில் வழங்கப்படும் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றவர்கள் அரசு திட்டங்களான UYEGP & PMEGP திட்டங்களின் கீழ் ரூ.25.00 லட்சம் வரை 25 சதவிதம் மானியத்துடன் (விளிம்புத் தொகை:10 சதவிதம்+) எளிதாக வங்கிக்கடன் பெற்று புதிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. பயிற்சி பதிவுக்கும் மற்றும் தகவலுக்கும் துடிசியா அலுவலகத்தில் அல்லது தொலைபேசி எண் 0461-2347005, 9840158943, 7708784867-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors

Joseph Marketing
Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory