» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் : என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:06:10 PM (IST)தமிழகத்தில் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தினார். 

தூத்துக்குடி மத்திய மாவட்டம், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னத்தாய் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழஞ்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலை, நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், lபேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது "விஜய் மல்லையா, வெளிநாடு தப்பிச் செல்லும் மத்திய நிதி அமைச்சரை சந்தித்தாக கூறியுள்ளார். இதன் மூலம் மல்லையா மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தப்பிச் சென்றதாக தொிகிறது. நீரவ் மோடி போன்றவர்கள் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தப்பிச் சென்றுள்ளனர். இந்த அரசு பொதுமக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனை கண்டித்து 28 கூட்டணி கட்சிகள் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. 

மோடியின் அரசு மக்களுக்கு எதிராக இருப்பதால், விஜய் மல்லையா கூறியதை வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழகத்தில் 1,000 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து இருப்பதாகவும், முதல்கட்டமாக அதில் 664 பள்ளிகளை மூடுவதாக உத்தேசித்து உள்ளனர். காமராஜர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆரம்ப பள்ளிகளை திறந்தார். இன்று பள்ளிகளை அரசு மூட இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்.

அரசு டாக்டர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்கள், மத்திய அரசு வழங்கக்கூடிய ஊதியத்தை போல் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறினார். விழாவில், மாநில தலைமை நிலையச் செயலாளர் சிவகுமார், மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் விஜயமாரீஸ், மாநில சிறுபான்மைத் தலைவர் மைக்கேல் அமலதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி மத்திய மாவட்ட தலைவர் அந்தோனிராஜ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

CSC Computer EducationThoothukudi Business Directory