» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் வழங்கக் கோரி அமமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 4:26:10 PM (IST)



கழுகுமலையில் குடிநீர் பிரச்சனை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமமுக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் கடந்த 2 மாதங்களாக மக்களுக்கு சீராக குடிநீர் வழக்கவில்லை என்றும், சேதமடைந்த சாலைகளை பராமரிப்பு செய்யபடவில்லை என்றும், சீராக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில், ஒன்றிய செயலாளா் செல்வக்குமாா் தலைமையில் பெண்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் விநியோகம், பேருராட்சியில் நிரந்தர நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து கோரிக்கை மனுவினையும் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனர்.  இதில் கழுகுமலை நகர செயலாளர் கோபி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory