» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய அளவிலான விருது: முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்து!!

வெள்ளி 14, செப்டம்பர் 2018 3:30:21 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டதையொட்டி முதல்வரை சந்தித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாழ்த்து பெற்றனர். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று (14.9.2018) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்து, மத்திய அரசின் சார்பில் கடந்த 11.9.2018 அன்று புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட தேசிய அளவிலான 3 மாநில விருதுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அளவிலான 2 மாவட்ட விருதுகள், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ் 7 முக்கிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பபட்ட தேசிய அளவிலான மாவட்ட விருது, ஆகிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசால், புதுடில்லி வித்யான் பவனில் 11.9.2018 அன்று நடத்தப்பட்ட தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டில் 2017-18ஆம் நிதியாண்டில் குறித்த காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சிறந்த செயல்பாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துக்களுக்கு புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாடு ஆகியவற்றிற்காக தேசிய அளவிலான 3 மாநில விருதுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தேசிய அளவிலான 2 மாவட்ட விருதுகளும் 

மற்றும் கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், குறிப்பிட்ட 7 முக்கியத் திட்டங்களை தன்னிறைவுடன் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய அளவிலான மாவட்ட விருதும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் அவர்களால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் 3 மாநில விருதுகள் ஒரே ஆண்டில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, முன்னாள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும், தற்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான பிரஷாந்த் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கூடுதல் இயக்குநர்  க.முத்துமீனாள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory