» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண ஆசைகாட்டி அரசு பெண் ஊழியர் பலாத்காரம் : வாலிபருக்கு போலீஸ் வலை வீச்சு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 11:03:12 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகள் ரமேஷ் காந்தி (27), ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலைபார்த்து வருகிறார். புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன் மகன் ரமேஷ் (27), அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வருகிறார். 

இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் காட்டி ரமேஷ் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

ராஜாSep 18, 2018 - 03:39:02 PM | Posted IP 122.1*****

well said

அருண்Sep 15, 2018 - 12:20:45 AM | Posted IP 162.1*****

பெண்ணுங்களுக்கு இதுவே வேலையா போச்சு ... நம்பிக்கை பெற்றோர் மீது வையுங்கள். ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education


Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory