» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோபியா விவகாரத்தில் எவ்வித சமரசமும் கிடையாது : துாத்துக்குடியில் இல.கணேசன் பேட்டி

வியாழன் 13, செப்டம்பர் 2018 1:03:39 PM (IST)

மாணவி சோபியா விவகாரத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என துாத்துக்குடியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும் எம்.பி., யுமான இல.கணேசன் இன்று துாத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தமிழக மக்களுக்கு எனது விநாயகர்சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகாத்மாகாந்தியின் 150 வது பிறந்த வருடம் நெருங்கி கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என அறிவித்து அதை ஒரு வருடத்திற்குள் செய்து முடித்து விட்டார். துாய்மை என்பது நம் ரத்தத்தில் ஊறிய விஷயமாக இருக்க வேண்டும். பொதுஇடங்களில் எச்சில் துப்புதல், குப்பைகளை கொட்டுதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றார். 

மாணவி சோபியா விவகாரம் குறித்து பேசிய அவர், ஜனநாயக நாட்டில் சட்டத்திற்குட்பட்டு போராடலாம், விமர்சிக்கலாம் அது தவறில்லை. ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் பாேது கோஷமிடுவது விமானசட்டங்களின் படி தவறாகும். மாணவி சோபியா விமானத்தில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்ட விவகாரத்தில் எந்தவித சமரசமும் கிடையாது. அவரின் பின்புலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

நிஹாSep 15, 2018 - 04:40:50 PM | Posted IP 162.1*****

எஸ்.வி.சேகர் விசயத்தில் சமரசம் உண்டா?

Raj mSep 14, 2018 - 01:05:31 AM | Posted IP 172.6*****

Mr. Boopathy, tamil puriyalaya? read clear then comment , why airlines to give complaints, your wrong , right person to compliant , understand first then comment pls...

ராமநாதபூபதிSep 13, 2018 - 01:55:50 PM | Posted IP 141.1*****

விமானத்தில் கோஷமிட்டிருந்தால் விமான நிறுவன ஊழியர்கள் தான் புகார் அளித்து இருக்க வேண்டும் . இதில் தமிழிசை ஏன் புகார் அளித்தார்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam

New Shape Tailors


CSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory