» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெந்தேகோஸ்தே சபை கன்னியாஸ்திரி மர்ம மரணம் : தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 12, செப்டம்பர் 2018 12:55:24 PM (IST)

தூத்துக்குடியில் பெந்தேகோஸ்தே சபையில் இளம் கன்னியாஸ்திரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகள் நித்யா (23),  இவர் தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள "தி பெந்தேகோஸ்தே சபை"-யில் தங்கி ஊழியம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று அவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.  அவரது உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கன்னியாஸ்திரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளதால் சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். 

மேலும், கன்னியாஸ்திரியின் மரணம் சபை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெந்தேகோஸ்தே சபையில், மூத்த கன்னியாஸ்திரிகளின் டார்ச்சர் இருந்ததாவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நித்யாவிற்கு காயம் ஏற்பட்டதாகவும், அவருக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும், இதனால் அவர் நேற்று மாலை உயிரிழந்து விட்டதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் இளைய கன்னியாஸ்திரி மீது வெந்நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதே சபையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களாபுரத்தை சேர்ந்த போதகர் கனகராஜ் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் மர்மமான முறையில் இறந்தார் என்பது குறிப்பிடதக்கது. தூத்துக்குடி பெந்தேகோஸ்தே சபையில், இளம் கன்னியாஸ்திரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

Pr. JoseSep 15, 2018 - 04:57:29 PM | Posted IP 172.6*****

God will know all about. We can't any say. God will Give Judgment. Praise the Lord Pr. Jose

DavidSep 14, 2018 - 01:43:40 PM | Posted IP 141.1*****

What's the matter? Pls translate this news in english

ஜோதிSep 14, 2018 - 01:22:06 PM | Posted IP 162.1*****

அக்கிரமம் நிறைந்த சபை

பெங்களூருSep 14, 2018 - 01:14:26 PM | Posted IP 162.1*****

இந்த சபை பொய்யான சபை

IsraelSep 14, 2018 - 12:31:36 AM | Posted IP 162.1*****

Praise the Lord brothers... After checking this message is true or false, then send it.... We spread the truth without knowing the exact explanations.... We should not ruin our name, It is good for us not to send such messages.... Because this message is involved with God's servants.... Maybe it may be true or false... So do not spread this message immediately and spread it to many... It is not a blessing to send us these messages.... Tq... God bless you🙏

SalomiSep 13, 2018 - 10:08:43 AM | Posted IP 141.1*****

Judgement the god

SalomiSep 13, 2018 - 09:59:55 AM | Posted IP 141.1*****

This is fake. She is gods servent. All are see the god only not the any one human

தாஸ்Sep 13, 2018 - 12:48:09 AM | Posted IP 141.1*****

இந்த சகோதரி தன் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் இந்த உலகத்திலுள்ள எல்லா மாயையான காரியங்களையும் வெறுத்து தன் தேவனுக்கென்று தன் ஜீவியத்தை அற்பணித்து விட்டார்கள். கல்லையும் மண்ணையும் நம்பாமல் மெய் தேவனை நம்பி விசுவாசத்தோடு மரித்திருக்கிறார்கள், இவர்களின் ஆத்துமா மெய்த்தேவனுடைய கரத்தில் இளைப்பாறும். இவர்கள் தங்கள்ள் ஜீவியத்தை தேவனுக்கென்று அற்பணித்து விட்டார்கள். இவர்களைப் பற்றி பேசும் தகுதி ல்லுக்கும் மரத்துக்கும் இல்லை

சாமி 3Sep 12, 2018 - 07:44:37 PM | Posted IP 141.1*****

குற்றவாளி கண்டுபிடிக்க 2 வருஷம் ஆகுமா ??? சீக்கிரமா குற்றவாளிகளை கண்டுபிடித்து அதை இழுத்து மூடுங்கள் ...இல்லாட்டில் அடிக்கடி பெந்தெகொஸ்தே கூடாரம் ஒரு கொலைகூடாரமாக மாற வாய்ப்பு இருக்கு ..

D.selvavinayagamSep 12, 2018 - 04:56:55 PM | Posted IP 162.1*****

Immediately take necessary action against concern culprit not see discrimination Christians or anybody

சாமி 2Sep 12, 2018 - 04:34:28 PM | Posted IP 162.1*****

கர்த்தர் விசாரணை செய்வாரா ?

joysSep 12, 2018 - 02:19:37 PM | Posted IP 141.1*****

இது உண்மை அல்ல பொய்

தூத்துக்குடி மக்கள்Sep 12, 2018 - 02:17:01 PM | Posted IP 172.6*****

இந்த சபை மர்மம் அடங்கிய கூடாரமாக உள்ளது அரசு இந்த போலி சபையை தடைசெய்யவேண்டும்

புகழ் சென்னைSep 12, 2018 - 01:50:31 PM | Posted IP 162.1*****

உடண்டியாக தனி படை அமைத்து விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ☝️புகழ்புக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorsNalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes


Anbu Communications

Joseph MarketingThoothukudi Business Directory