» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கைது நடவடிக்கைக்கு அஞ்சி வாலிபர் தற்கொலை? போலீசார் விசாரணை

புதன் 12, செப்டம்பர் 2018 11:43:54 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு இரு சம்பவங்களில் வாலிபர், கூலித் தொழிலாளி தற்கொலை செய்து உயிரை மாய்த்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகன் கார்த்திக் (24), கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பைக்கில் சென்றபோது ஒருவர் மீது மோதி விட்டாராம். இதில், காயம் அடைந்தவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த அவர் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் கிராமம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் பாண்டியன் (44). இவரது மனைவி பார்வதி (40). கூலி வேலை பார்த்து வந்த வினோத் பாண்டி தினமும் மது குடித்துவிட்டு வருவாராம். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இதுபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில். மனவேதனையடைந்த வினோத் பாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


CSC Computer EducationThoothukudi Business Directory