» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோபியாவுக்கு ஜாமின்: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, செப்டம்பர் 2018 12:05:18 PM (IST)

பாஜகவை விமர்சித்ததாக கைதான இளம்பெண் சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தபோது, அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த சாமி மகள் லூயிஸ் சோபியா (22) என்பவரும் பயணித்துள்ளார். ஆராய்ச்சி மாணவியான லூயிஸ் சோபியா கனடாவிலிருந்து சென்னை வந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துள்ளார். 

விமானப் பயணத்தின்போது தமிழிசையை பார்த்ததும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டாராம். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பின்னரும் பாஜக குறித்தும், தமிழிசை குறித்தும் அவதூறாக பேசினாராம். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், லூயிஸ் சோபியாவிடம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். பின்னர் அவரை, தூத்துக்குடியில் உள்ள  மாஜிஸ்ட்ரேட் தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து சோபியாவை, 19ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். 

இந்நிலையில், மாணவி சோபியாவின் ஜாமின் மனு இன்று தூத்துக்குடி ஜே.எம்.3 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் தமிழ்செல்வி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சோபியா, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதால் விரைவில் அவர் விடுதலையாகிறார்.  முன்னதாக மாணவிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் அதிசயகுமார் கூறுகையில், "அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது. சோபியாவின் ஜாமினுக்கு பாஜக வழக்கறிஞர் உட்பட யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை" என்றார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Sep 4, 2018 - 03:02:09 PM | Posted IP 162.1*****

ஏன் பாஜக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

ThamilandaSep 4, 2018 - 12:17:43 PM | Posted IP 162.1*****

Congrats..... Vaalthukkal ..... Virattuvom BJP sembuhalai intha naattai vittu.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications


Joseph Marketing

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

CSC Computer EducationThoothukudi Business Directory