» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் : துாத்துக்குடி பெண்ணிடம் போலீஸ் விசாரணை

திங்கள் 3, செப்டம்பர் 2018 1:34:06 PM (IST)துாத்துக்குடி விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பெண் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துாத்துக்குடி 3வது மைல் கந்தன்காலனியை சேர்ந்த சாமி என்பவரது மகள் லுாயிஸ்சோபியா (23). கனடாவில் வேலை செய்து வரும் இவர் சென்னை வந்து அங்கிருந்து துாத்துக்குடிக்கு விமானத்தில் இன்று வந்துள்ளார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் பயணம் செய்துள்ளார். பின்னர் துாத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி செல்லும் போது திடீரென லுாயிஸ்சோபியா, பிரதமர் மோடியையும், தமிழிசை செளந்திரராஜனையும் எதிர்த்து கோஷமிட்டுள்ளார். 

இதனால் தமிழிசையும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விமானநிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிடம் தமிழிசை செளந்திரராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் லுாயிஸ்சோபியா விடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பேசிய தமிழிசை, ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதலால் சோபியா பாஜகவை விமர்சித்திருக்கலாம் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அருண்Sep 4, 2018 - 10:43:06 PM | Posted IP 172.6*****

விமானத்தில் இந்த மாதிரியான செய்கைகள் அறவே தவிர்க்க பட வேண்டிய ஒன்று. International flights ல நெறைய time இப்புடி வம்பளந்தவங்களை கைது செய்து இருக்கிறார்கள். இந்த அறிவு கூட இல்லாம நீ எதுக்கு கனடா க்கு போய் படிக்க போன தாயி.!! அசிங்கம்.

தூத்துகுடிகாரன்Sep 4, 2018 - 03:20:41 PM | Posted IP 162.1*****

கனடா கும் ஆஸ்திரேலியா கும் வித்யாசம் தெரியாதவன் எல்லாம் கருது எழுதுகிறான், repetex english வேற

IndianSep 3, 2018 - 06:27:53 PM | Posted IP 162.1*****

If it is so, who don't you settle in Australia. Why do you come to India?

கணேஷ்Sep 3, 2018 - 04:09:17 PM | Posted IP 162.1*****

விமானத்தில் வைத்து பா.ஜ.க. பாசிச ஆட்சி என்று ஏன்?

கேட்ச்Sep 3, 2018 - 03:55:20 PM | Posted IP 162.1*****

பிஜேபி யை தவிர்த்த எல்லா கட்சியும் எதிர்த்து தான் கோஷம் போடுகிறார்கள், இது தமிழிசையின் விளம்பர யுக்தி ஆக கூட இருக்கலாம்...

சாமி 2Sep 3, 2018 - 02:34:59 PM | Posted IP 172.6*****

விமானத்தின் உள்ளே நடந்தது வெளியில் தெரியாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals
Thoothukudi Business Directory