» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எஸ்பியிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

வியாழன் 30, ஆகஸ்ட் 2018 5:24:37 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் சந்தித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இ.கா.ப. அவர்களை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து புகார் அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 2707 புகார் மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது. 

இதற்கென மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சத்திய நாராயணன் மேற்பார்வையில் இரண்டு காவலர்களை வரவேற்பாளர்களாக நியமித்து, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களை வரவேற்று, அவர்களுடைய கோரிக்கைகளை அறிந்து, வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காவல் நிலையங்களில் தரும் புகார்களை பெற்று, அவற்றைப்பதிவு செய்து காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பொது மக்களின் துரித சேவைக்காக ‘ஹலோ போலீஸ் என்ற அமைப்பையும் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஏற்படுத்தி அதற்கென உள்ள அலைபேசி எண் 95141 44100 என்ற எண் கொடுக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேற்படி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு குறைகள் மற்றும் தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையெனவும், அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சமீபத்தில் பொதுமக்களுக்கு பத்திரிக்கைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

மேற்படி அறிவிப்பிற்கு பிறகு பொதுமக்களிடமிருந்து அதிகப்படியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன, அவைகள் மீதும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று அவசர போலீஸ் எண். 100ம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் சந்தித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஐ.ஓ.பி வங்கியின் துறைமுக கிளை இடமாற்றம்

வியாழன் 20, செப்டம்பர் 2018 8:34:08 AM (IST)

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals


Joseph Marketing






Thoothukudi Business Directory