» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்!!

சனி 18, ஆகஸ்ட் 2018 9:35:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஏற்பாட்டில், இன்று (18.08.2018) தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர்கள் சார்பாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 

50 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 15 பெட்டிகளில் மருந்துப்பொருட்கள், 120 அரிசி மூட்டைகள், 200 கிலோ துவரம் பருப்பு, 100 கிலோ உளுந்தம் பருப்பு, 20 பெட்டி பிஸ்கட் பாக்கெட்டுகள், 10 பெட்டி ரஸ்க் பாக்கெட்டுகள், 600 பாக்கெட் தீப்பெட்டி பண்டல்கள், 4500 மெழுகுவர்த்திகள் மற்றும் 2 பெட்டி டெட்டால் சோப்புகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காவல்துறை ஆளினர்கள் தொடர்ந்து உதவி செய்ய முன் வந்து பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள், அவைகளும் சேகரிக்கப்பட்டு விரைவில் அனுப்பப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார். மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest CakesNalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory