» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேரளாவுக்கு நிவாரணஉதவி வழங்க சிபிஎம் அழைப்பு

சனி 18, ஆகஸ்ட் 2018 7:54:43 PM (IST)

கேரள மாநில மக்களுக்கு நிதியும், நிவாரண பொருட்களும் கொடுத்து உதவுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் துாத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.கேரளாவில் கடந்த 2 ½ மாத காலமாக கனமழை பெய்து வருகிறது.  1924ம் ஆண்டிற்கு பிறகு இது வரை இல்லாத அளவிற்கு வழக்கமான மழை அளவைவிட பல மடங்கு கூடுதலாக பெய்ததன் காரணமாக பெருவெள்ளம், நிலசரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் நிலைமை என்னவென்றே தெரியவில்லை.  

வீடுகளில் வெள்ளம் புகுந்தும், சூழ்ந்தும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். கேரள மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களிலும் கனமழை பெருவெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. 3 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.  பெரும் துயரத்தில் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்திட தோள் கொடுக்கவும், துணை நிற்க்கவும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

அரிசி, பருப்பு வகைகள், பெரியவர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்களுக்கான ஆடைகள், குளியல், துணி துவைக்கும் சோப்புக்கள், பவுடர்கள், மாவு வகைகள், பயிர் வகைகள், பிஸ்கட், டீ தூள், காப்பி தூள், பால் பவுடர், தேங்காய் எண்ணெய் போன்ற அத்யாவசிய பொருட்களும், பண உதவியும் தாராளமாக செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  பொருட்களை கொடுப்பவர்கள் நிவாரண நிதி ஃ பொருட்கள் வசூலிக்கும் போதும், தூத்துக்குடியில் 16, மாசிலாமணிபுரம் 3வது தெருவிலுள்ள மாவட்டக்குழு அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம்.  தொடர்புக்கு : செல்போன் எண் 9443872300.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Joseph Marketing


New Shape TailorsThoothukudi Business Directory