» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலக்காடு - திருச்செந்தூர் வழக்கம்போல் இயங்கும் : தெற்குரயில்வே அறவிப்பு

சனி 18, ஆகஸ்ட் 2018 7:15:00 PM (IST)

பாலக்காடு - திருச்செந்தூர் இடையே முழுமையாக வழக்கமான நேரங்களில் இயக்கப்படும் என தெற்குரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்குரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: விருதுநகர்-சாத்தூர் மற்றும் திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக வண்டி எண் 56769 பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் 15.8.2018 முதல் 31.8.2018 வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும்,  புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மாற்றங்கள் 20.8.2018 திங்கட்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டு பயணிகள் வசதிக்காக இந்த ரயில்கள் பாலக்காடு - திருச்செந்தூர் இடையே முழுமையாக வழக்கமான நேரங்களில் இயக்கப்படும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education

Nalam PasumaiyagamAnbu CommunicationsThoothukudi Business Directory