» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் சார்பில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

சனி 18, ஆகஸ்ட் 2018 7:11:40 PM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 739 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சமுதாய பணி களின் ஒரு அங்கமாகவும், கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும்  நிகழ்ச்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் முதலாவது  குடியிருப்பு வளாகத்தில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன முதன்மை வணிகஅதிகாரி தனவேல் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர்: ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளாக கல்வி, திறன் வளர்ப்பு, பெண் கல்வி ஊக்குவிப்பு போன்ற திட்டங்களை  மாணவ, மானவிகளுக்காக செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி மருத்துவம், சுகாதாரம், விளையாட்டு, வேளாண் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற வற்றிலும் சமுதாய முன்னேற்றத்திற்காக தனது பணியை செய்து வருகிறது என்றார்.    

நிகழ்ச்சியில்  புகழ்பெற்ற வழிகாட்டி கல்வியாளர் சென்னை  மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 739  மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகைகளை வழங்கினார். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த  மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நிறுவன பொது மேலாளர்கள்  தனவேல், கேப்டன் சோனிக்கா முரளிதரன், ஏ.சர்வேசன்,  மருத்துவ அதிகாரி டாக்டர். கைலாசம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

மக்கள்Aug 20, 2018 - 07:30:16 PM | Posted IP 172.6*****

தூத்துக்குடியில் மே22 நடந்த சம்பவத்தை மறந்து அவனுக்கு ஆதரவு அளிக்காதிர் இது போல அவன் தரும் உதவிகளை புறக்கணித்தால் மட்டுமே அந்த நாசக்கார ஸ்டெர்லைட்யை அடியோடு ஒழிக்க முடியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications
CSC Computer EducationThoothukudi Business Directory