» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பசுவந்தனை கூட்டுறவு சங்க தேர்தல்: 11 உறுப்பினர்கள் தேர்வு

சனி 18, ஆகஸ்ட் 2018 5:20:56 PM (IST)பசுவந்தனை கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், 11 பேருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை கூட்டுறவு வங்கியில் கடந்த 16ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. இன்று தேர்தலுக்கான வாங்குகள் எண்ணப்பட்டு கூட்டுறவு வங்கி நிர்வாககுழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான பரிந்துரை இன்று நடைபெற்றது. இதில் 11 பேருக்கு வெற்றி பெற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

கூட்டுறவு சங்க தேர்தலில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தூர பாண்டியன், அய்யாசாமி, நெல்லைவடிவு, ஆறுமுககனி, தமிழ்செல்வி, பரமசிவன், பிள்ளைகாளிசாமி, கைலாசம், நாராயணசாமி, சீனிவாசகம்  ஆகியோர் நிர்வாககுழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றதாக அறிவித்து அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் வரும் 24ம் தேதி தேர்வு செய்யப்படுவர் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். முன்னதாக 25 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsCSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory