» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக்நகர் பள்ளியின் பெற்றோர் தினவிழா: ஆட்சியர் பங்கேற்பு

சனி 18, ஆகஸ்ட் 2018 4:58:58 PM (IST)



தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 45ஆம் பெற்றோர் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். 

தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 45ஆம் பெற்றோர் தினவிழா ராஜகோபாலன கலையரங்கில நடைபெற்றது. விழாவிற்குத் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அவரது துணைவியார் அத்யஷா நந்தூரி ஆசிரியப் பெருமக்களுக்கும் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவருமான எஸ்.ஆர். இராமகிருஷ்ணன், அவரது துணைவியார் அகிலா ராமகிருஷ்ணன் பள்ளியின் செயலர் எஸ்..வெங்கட்ராமன் இணைச்செயலாளர் டி.எஸ். பிரேம் சுந்தர் பள்ளித் தலைமை ஆசிரியர் எல்.பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை வகித்தனர். 

இறைவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரவேற்பரைக்குப் பின்னர் பள்ளியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. விழாவில், பரதநாட்டியம், இளங்குழந்தைகளின் ஆங்கில நாடகம், ஜஸ்தானின் நடனம், ‘தெய்வமகள்” என்ற தமிழ் நாடகம், மாணவர்களின் மற்றும் மாணவியரின் Fusion நடனம் ஆறுகளின் இணைப்பை உணர்த்தும் ஆங்கில நாடகம், தண்ணீரின் சிறப்பை உணர்த்தும் குறும்படம் போன்ற அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals

Joseph Marketing







Thoothukudi Business Directory