» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் நிர்வாக அலுவலகம் செயல்பட அனுமதி : தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கம் வரவேற்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 8:04:27 PM (IST)
பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் நிறுவன வளாகத்தில் நிர்வாக அலுவலகம் செயல்படலாம் என அனுமதி அளித்ததற்கு தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளனர்.

இது குறித்து துாத்துக்குடி ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற தமிழகஅரசின் உத்தரவிற்கெதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தது. இதில் கடந்த ஆக 9 ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவன வளாகத்தில் நிர்வாக அலுவலகம் செயல்படலாம் என பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை ஏற்று கொண்டதற்கு தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். 

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் விரைவில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  அனுமதி வழங்கும் படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .


மக்கள் கருத்து

manithanAug 11, 2018 - 10:31:11 AM | Posted IP 162.1*****

வாலியும் வேதனையும் அவரவர்க்கு வந்தால் தான் தெரியும்....

சிவராம்Aug 11, 2018 - 09:19:45 AM | Posted IP 162.1*****

யாரும் சட்டத்தை கையிலெடுக்கக் கூடாது. ஒரு சில சுய நல வாதிகளால் தூத்துக்குடியே கலவர பூமியாகி விட்டது. 13 உயிர்களின் ஆவி போரட்டத்தை தூண்டி விட்டவர்களை விடாது. சீனாவின் கைக்கூளிகள்

அகில்Aug 10, 2018 - 11:07:58 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லிட் போல் வேறு எந்த நிறுவனமும் சமுதாய வளர்ச்சி பணிகள் செய்யவில்லை . மாசு என்பது பொய் புரளி புகார் . சட்டப்படி நிரூபிக்க முடியாதவர்கள் வன்முறையை தூண்டி விட்டார்கள் . அதன் விளைவு அப்பாவி உயிர்கள் பலி போனது

ஆப்Aug 10, 2018 - 08:44:22 PM | Posted IP 162.1*****

இந்த ஆலையன்றி வேறு பல மாசற்ற ஆலைகளை இந்த அரசாங்கம் நினைத்தால் கொண்டுவர முடியும்.இந்த தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.அதற்கு நீங்கள் குரல் கொடுத்தால் ,மனு கொடுத்தால் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆப்Aug 10, 2018 - 08:40:26 PM | Posted IP 162.1*****

மன்னிக்கவும் பதிமூன்று பேர் மரணம் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

New Shape TailorsThoothukudi Business Directory