» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 7:13:40 PM (IST)ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கினால் துாத்துக்குடியில் இயல்புநிலை இருக்காது என பேராசிரியை பாத்திமாபாபு துாத்துக்குடியில் பேட்டியின் போது கூறினார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமாபாபு கூறும் போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்ஆலையின் நிர்வாக செயல்பாடுகளுக்கு அனுமதியளித்திருப்பது துாத்துக்குடி மக்களிடையே ஆலை இயங்கி விடுமோ என்ற அச்சம்,பயம் ஏற்பட்டுள்ளது. 

அந்த ஆலையின் உள்ளே,வெளியே ஏகப்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது்.. தமிழகஅரசினுடைய நடவடிக்கைகளை நாங்கள் நம்புகிறோம். ஆனால் வலுவான வாதத்தையும் மக்கள் எதிர்ப்பை சுட்டி காட்டி நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழகத்தில் எங்கும் இதுபோன்ற தாமிரஆலை அமைக்க கூடாதுஎன்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். 

அந்த ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுகாதார ஆய்வு நடத்தி அதை நீதிமன்றத்தில் தங்கள் வாதத்திற்கு பயன்படுத்த வேண்டும். தற்போது தான் துாத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்பு நிலை இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, வழக்கறிஞர் அதிசயகுமார், சுந்தரிமைந்தன், தெர்மல்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

PeterAug 11, 2018 - 10:01:52 AM | Posted IP 162.1*****

ஆமா இயல்பு நிலை இருக்காது பேரை சொல்லுடா உண்மை

MULLAIAug 11, 2018 - 09:54:35 AM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது

உண்மைAug 11, 2018 - 09:23:21 AM | Posted IP 162.1*****

முதலில் நீங்க மீன் பிடிக்காம இருங்கள் அம்மா மிரட்டாதீங்க. 13 பேர் சாவுக்கு காரணமே இந்த நல்லவங்க தான்.

கணேஷ்Aug 10, 2018 - 11:12:12 PM | Posted IP 162.1*****

என்ன இயல்பு நிலை ? ஏன் இருக்காது? | 3 பேர் சாவுக்கு யார் ? காரணம்? சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவரும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamCSC Computer Education


New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory