» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு மெளனஅஞ்சலி ஊர்வலம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 5:33:43 PM (IST)



தூத்துக்குடியில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மெளன அஞ்சலி ஊர்வலம் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே அண்ணா சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை, பெரிய பள்ளிவாசல், வழியாக பழைய மாநகராட்சி முன்பு நிறைவடைந்து. ஊர்வல முடிவில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சேவியர், முருகன்,  பாஜக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காங்கிரஸ் சார்பில் ஏபிசிவி சண்முகம், டேனியல்ராஜ், முரளி, மா.கம்யூனிஸ்ட் சார்பில் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் அழகுமுத்து பாண்டியன், ம.தி.மு.க. சார்பில் நக்கீரன் தேமுதிக சார்பில் ஆறுமுகநயினார் தமாகா சார்பில் கதிர்வேல், சமத்துவமக்கள் கழகம் சார்பில் அற்புதராஜ், ஆதிதமிழர் கட்சி மனோகர், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் சொக்கலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நகர,ஒன்றிய, மாவட்ட கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals



Joseph Marketing

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory