» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாருக்கு கொலைமிரட்டல்: பிரபல ரவுடி கைது

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 8:55:25 AM (IST)

கோவில்பட்டியில் காவல்துறையினரை அரிவாளால் மிரட்டி கொல்ல முயன்றதாக பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரசுப்பு மகன் ஹரிகரசுதன்(26).  பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு,  நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். அவரை போலீசார் ஒரு வழக்கு தொடர்பாகவும் தேடி வந்தனராம். இந்நிலையில், நேற்று ஹரிகரசுதன் பார்க் ரோடு வாட்டர் டேங்க் அருகே நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாம். 

அதையடுத்து மேற்கு காவல் உதவி ஆய்வாளர்கள் இசக்கிராஜா, அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஹரிகரசுதன் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து,  தன் கையில் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முயன்று மிரட்டினாராம்.  அதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes


CSC Computer Education



Thoothukudi Business Directory