» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் துறை திறனாய்வுத் தேர்வு: 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 8:49:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு எழுத 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட தலைமை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 300 செலுத்தி அஞ்சல் தலைசேகரிப்பு கணக்கு தொடங்கிய மாணவர், மாணவிகளுக்கு அஞ்சல் துறை சார்பில் தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்னும் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு தொடங்கி உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு அஞ்சல் துறை சார்பில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர், மாணவிகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு தொடங்கியுள்ள மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு இல்லாதவர்கள், புதிதாக ரூ.300 தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செலுத்தி புதிய கணக்கை தொடங்கியும் உதவித்தொகைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக. 16 ஆம் தேதிக்குள் மதுரை தென் மண்டல அஞ்சல் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் உறையில் தீனதயாள் ஸ்பார்த் யோஜனா என்று எழுதப்பட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing


crescentopticals

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory