» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பலத்த காற்றில் செல்போன் கோபுரம் சரிந்தது : பெரும் விபத்து தவிர்ப்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 8:43:21 AM (IST)



தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக செல்போன் கோபுரம் சரிந்து விழுந்தது. காலி இடத்தில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று காலை முதல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் தாளமுத்துநகர் அருகே உள்ள கணேசபுரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தனியார் செல்போன் கோபுரம், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த செல்போன் கோபுரம் நேற்று வீசிய காற்றில் அடியோடு சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த வீடுகளின் மீது விழாமல் காலி இடத்தில் விழுந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சேதம் அடைந்த செல்போன் கோபுரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Joseph Marketing



Thoothukudi Business Directory