» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து ரூ.12 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
வியாழன் 9, ஆகஸ்ட் 2018 4:42:19 PM (IST)

கோவில்பட்டியில் வாகன உதிரிபாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த காசிராஜன் மகன் மகேஸ்வரன். இவர் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் கடை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இன்று கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்தி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன், கடையில் உள்ள பொருட்கள் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இதன் மதிப்பு ரூ.12 லட்சமாகும். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைய தலைமுறையினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:41:30 AM (IST)

ரயில்வே தேர்வுக்கு தூத்துக்குடி நூலகத்தில் இலவச பயிற்சி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:15:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:09:30 AM (IST)

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: துணை முதல்வர் ஆறுதல்!!
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:56:43 AM (IST)

கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு நேர்காணல் : பிப் 22 முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது
சனி 16, பிப்ரவரி 2019 7:49:14 PM (IST)

ஸ்டெர்லைட் சார்பில் வடிகால் தூர்வாரி சீரமைப்பு
சனி 16, பிப்ரவரி 2019 6:29:41 PM (IST)
