» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் எஸ்ஐ மீது சராமாரி தாக்குதல்: 3 பெண்கள் கைது

புதன் 8, ஆகஸ்ட் 2018 11:24:17 AM (IST)

தூத்துக்குடி அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி, இவர் ஒரு வழக்கு தொடர்பாக தருவைகுளம் ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வரும் தாசன் மகன் ஜேஸ் அந்தோணி (46) என்பவரின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்றார். அப்போது அவரை விசாரணை செய்ய விடாமல், ஜேஸ் அந்தோணி மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்துள்ளனர். 

மேலும், ஜேஸ் அந்தோணி மற்றும் அவரது மனைவி சாந்தி (40), தாயார் தாெம்மாயி (59), மகள் சவரியம்மாள் (25) ஆகிய 4பேரும் சேர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை சராமாரியாக தாக்கியதோடு,  அவர் கொண்டு வந்த ஆவணங்களை கிழித்துள்ளனர். இதுகுறித்து எஸ்ஐ ராஜேஸ்வரி தருவைகுளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தி, சவரியம்மாள், தொம்மாயி ஆகிய 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜேஸ் அந்தோணியை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



crescentopticals

Joseph Marketing



New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory