» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டயோசீசன் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு

செவ்வாய் 24, ஜூலை 2018 10:49:47 AM (IST)

டயோசீசன் தேர்தலில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் போட்டியிட கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக துாத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: துாத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்களில் போட்டியிட துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் மனு செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

இச்செயல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானது. தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973 மற்றும் தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1974ன் படி அரசு பள்ளிகளில் பணிபுரிபவர்கள், சிறுபான்மை பள்ளிகளில் வேலை செய்வோர் அரசியல், மதம், இனம் போன்ற தேர்தலில் நிற்கலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாசரேத்தை சேர்ந்த ஜெ.டி.டி. சத்தியா என்பவர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இந்நிலையில், தலைமை ஆசிரியர்கள் போட்டியிட கூடாது டயோசீசன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி - நாசரேத் டயோசீசன் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மக்கள் கருத்து

டேவிட்Aug 2, 2018 - 07:02:03 AM | Posted IP 172.6*****

டயோசிசன் பள்ளியின் ஆசிரியர் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையான பதவி. இவர்களுக்கு டயோசிசன் பொறுப்புகளில் நிற்பதற்கு ஏன் உரிமை கிடையாது. அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் இப்படியெல்லாம் ஆனை விடுவீர்களா? டயோசிசன் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வேண்டாம். டயோசிசன் சம்பளம் கொடுத்து கொள்ளுவார்கள். இனி மேல் அரசு ஆணை எப்படி வருது என்று பார்க்கலாம்.

a joseph davidJul 27, 2018 - 03:32:25 PM | Posted IP 162.1*****

நல்ல காரியம்தான் போதகரும் சபை மக்களும் தான். இருக்கவேண்டும்.

Azariah Navaraj JosephJul 27, 2018 - 01:36:03 PM | Posted IP 162.1*****

Go no. Date Reg. Diocesan election ..for govt. Employees

MULLAIJul 25, 2018 - 10:05:06 AM | Posted IP 162.1*****

GURU VA NA VARU KUM NI RAN THARA D.C. ENPATHAI NEEKKA VENDUM. NANA ATCHIKU VANTHAL ATAHAI SEIVEN.

உண்மைJul 24, 2018 - 06:19:56 PM | Posted IP 162.1*****

சத்தியா என்பவருக்கு பதவிக்கு வரமுடியவில்லை என்ற ஏக்கம்.

உண்மைJul 24, 2018 - 06:17:52 PM | Posted IP 162.1*****

ஆசாரியனுக்கு ஆசிரியர் சங்கங்களுக்கும் திருமண்டல நிர்வாகத்திற்கும் வித்தியாசம் தெரியாதா..

laurynJul 24, 2018 - 05:42:15 PM | Posted IP 141.1*****

like this we are expecting the same type from St.John, Aspinwall and all other shipping companies...

ஆசாரியன்Jul 24, 2018 - 04:54:00 PM | Posted IP 162.1*****

அதான் ஆயிரத்து எட்டு ஆசிரியர் சங்கம் இருக்கே அப்புறம் இது எதுக்கு?

உண்மைJul 24, 2018 - 04:04:05 PM | Posted IP 172.6*****

இது தவறு. திருமண்டல நிர்வாகத்தில் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் வேண்டும். இது தேவையில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளும் அரசு என்ன செய்தது.

ஜெபசிங்Jul 24, 2018 - 03:05:39 PM | Posted IP 162.1*****

நல்லது

தமிழன்Jul 24, 2018 - 01:05:47 PM | Posted IP 162.1*****

தமிழக அரசின் நல்ல முடிவுக்கு எனது பாராட்டுக்கள்

YovanJul 24, 2018 - 12:39:18 PM | Posted IP 162.1*****

சிறப்பு மிக சிறப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer EducationNalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory