» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 27ல் பூஜை நேரம் மாற்றம்

வியாழன் 19, ஜூலை 2018 4:14:07 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வருகிற 27-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாதம் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.50 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. 

இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை, 5 மணிக்கு தங்கரதம் புறப்பாடு, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று, இரவு 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும். 

இரவு 10 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, 10.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையாகி, 10.50 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, நடைதிருக்காப்பிடப்படும். சனிக்கிழமை (ஜூலை 28) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals




Thoothukudi Business Directory