» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை குறித்த வதந்திகளை நம்பாதீங்க : மாவட்ட ஆட்சியர் பேட்டி!

திங்கள் 16, ஜூலை 2018 6:59:46 PM (IST)

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஸ்டெர்லைட் மீண்டும் தொடங்க‌ப் போகிறது என்பது வதந்தி தான் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இன்று ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்க‌ப் போகிறது என்று வதந்திகள் பரவியது. இதுகுறித்து செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர்,  ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஸ்டெர்லைட் மீண்டும் தொடங்க‌ப் போகிறது என்பது வதந்தியே. ஸ்டெர்லைட் ஆலைக்கான மூலப்பொருள் அனைத்தும் 50சதவீதம் வெளியேற்றப்பட்டுவிட்டது. மேலும், இதுகுறித்து சார் ஆட்சியர் தலைமையிலான குழு கண்கானித்து வருகிறது. இதனால், உற்பத்தி என்பது தற்போது சாத்தியமில்லை என்றார் ஆட்சியர்.

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று நடந்த கூட்டம் குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எங்களுடையை நிரந்தர ஊழியர்கள் அனைவரும், எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் வேறு எந்த நிறுவனத்திற்கும் செல்லவில்லை என்பது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிகழ்வு குறித்து ஊழியர்களுக்கு தெரியப்படுத்துவது எங்கள் கடமையாகும். அதன் காரணமாகவே இன்று ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், வேதாந்தா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

M.sundaramJul 18, 2018 - 09:01:57 AM | Posted IP 162.1*****

Change is a continuous process. Now it will not be opened, But In future what ?

நண்பன்Jul 17, 2018 - 09:56:42 AM | Posted IP 162.1*****

"தற்போது சாத்தியமில்லை" என்பதன் அர்த்தம் என்ன ?????????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors

Anbu Communications


CSC Computer Education

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory