» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துணை ஆட்சியர்களுக்கு நவீன டேப்லெட் : ஆட்சியர் வழங்கினார்

திங்கள் 16, ஜூலை 2018 4:21:35 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 10 துணை ஆட்சியர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய டேப்லெட்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன், போன்ற நலத்திட் உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொது மக்களிடமிருந்து பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்காக மாவட்ட அளவில் பணியாற்றும் துணை ஆட்சியர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய டேப்லெட் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கரநாரயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செழியன், உதவி ஆணையர் (கலால்) சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .இந்திரவள்ளி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிந்து உள்ளிட்ட துணை ஆட்சியர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய டேப்லெட்களை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். மு.வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

இவன்Jul 16, 2018 - 09:04:19 PM | Posted IP 162.1*****

அவருக்கு வாங்க காசு இல்லையா ?? பாவம் பரம ஏழை துணை ஆட்சியர்கள் ..

உண்மைJul 16, 2018 - 06:47:09 PM | Posted IP 162.1*****

இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு போடத்தான் இந்த டேப்லெட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketingcrescentopticals
New Shape TailorsThoothukudi Business Directory