» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றம்: ஆட்சியர் பேட்டி

திங்கள் 16, ஜூலை 2018 4:11:23 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 40 சதவீத இரசாயனப் பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. இப்பணிகளை அந்நிறுவனத்தினரே செய்து வருகிறார்கள். அங்குள்ள பெட்ரோலிய பொருட்கள் தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆலை வளாகத்தில் உள்ள மரங்களை பராமரிப்பதற்காக மாநகராட்சி மூலம் 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், மின் இணைப்பு வழக்கப்பட மாட்டாது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் அளித்துள்ள மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியான 13பேர் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவதற்கான கோப்புகள் அனைத்தும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வழங்கப்படும். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இதுபோல் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த மரியசிலுவை என்பவருக்கு தனியார் நிறுவனம் நிதியுதவி மூலம் ஆட்டோ வழங்கப்பட்டது என்றார். 


மக்கள் கருத்து

ஆப்Jul 17, 2018 - 01:36:14 PM | Posted IP 162.1*****

நல்லது நடந்த சரிதானுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


Joseph Marketing

New Shape Tailors

Thoothukudi Business Directory