» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நவதிருப்பதி கோவிலுக்கு செல்லும் சாலை மோசம் : ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

திங்கள் 16, ஜூலை 2018 1:53:46 PM (IST)ஸ்ரீவைகுண்டத்தில் படுமாேசமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் சித்திரைவேல் தலைமையில் பாஜகவினர் துாத்துக்குடி மாவட்டஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில், "ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளிலும், சாலை மிகவும் மோசமாக உள்ளது. நவதிருப்பதிகளில் முதலாவது தலமான கள்ளர்பிரான் சுவாமி கோவிலுக்கு செல்லும் நான்கு ரத வீதிகளிலுள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

5 வது வார்டில் தெருவிளக்குகள் 3 மாதமாக எரியவில்லை. அங்கு துப்புரவு பணிகளும் சரியாக நடக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals

Joseph Marketing

Thoothukudi Business Directory