» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

வெள்ளி 13, ஜூலை 2018 10:55:47 AM (IST)தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க 2018-19ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடந்தது. 

விழாவில், பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சங்கரலிங்கம் இறைவணக்கம் வாசித்தார். கடந்த ஆண்டு தலைவர் சிவராம கிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் செந்தில் நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதிகை கண்ணனை பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் நவமணி புதிய தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து, தலைவர் பொத்தானை அணிவித்தார். பின்னர் செயலாளர் சரவணாஸ் செந்தில் ஆறுமுகத்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து புதிய தலைவராக பதவியேற்றுக்கொண்ட கண்ணன் ஏற்புரையாற்றினார். பின்னர் அவரோடு பணியாற்ற இருக்கும் பல்வேறு குழுத் தலைவர்களை சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் தடகளப் பிரிவில் மாநில அளவில் பங்கேற்ற மாணவியை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு உதவி ஆளுநர் கண்ணன் பொத்தான் அணிவித்து ரோட்டரி சங்கத்தில் இணைத்து வைத்தார். முன்னாள் ஆளுநர் நவமணி கோரல்வாய்ஸ் சங்க இதழை வெளியிட முன்னாள் ஆளுநர் ஜோவில்லவராயர் பெற்றுகொண்டார். சிறப்பு விருந்தினரை கிருஷ்ணாசங்கர் அறிமுகம் செய்து பேசினார். 

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முன்னாள் ஆளுநர் நவமணி சிறப்புரையாற்றினார். விழாவில், கப்பல் வணிகத்தில் கடந்த 54 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜோவில்லவராயரை பாராட்டி கௌரவிக்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஜோவில்லவராயர், உதவி ஆளுநர் கண்ணன், முன்னாள் உதவி ஆளுநர் முத்தையாபிள்ளை ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிறைவாக செயலாளர் செந்தில் ஆறுமுகம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் ஜேசையா வில்லவராயர், பல்வேறு ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அரிமா சங்கம், ஜெசீஸ் சங்கம், வியாபாரிகள் சங்கத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Anbu CommunicationsCSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory