» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் மத்திய அமைச்சராவார் : அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு

வெள்ளி 13, ஜூலை 2018 10:31:48 AM (IST)நடைபெற உள்ள பாராளுமன்றதேர்தலில் வெற்றி பெற்று தூத்துக்குடி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மத்திய அரசில் அமைச்சராக பங்கேற்று தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவார் என நாசரேத்தில் நடைபெற்ற திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசி னார்.

நாசரேத் கே.வி, கே.சாமி சிலை அருகில் திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நாசரேத் நகர திமுக செயலாளர் அ.ரவி செல்வக்குமார் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய திமுக செயலாளர் வி.நவீன்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.அசோக், துணை அமைப்பாளர்கள் திணேஷ் கண்ணன், மணிகண்டன், சவுந்திரபாண்டியன், பொருணை துறைவன், நகர அவைத்தலைவர் அருள்ராஜ், நகர துணைச் செயலாளர் ஜெயசிங், நகர இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் மாரிமுத்து, பார்த்தீபன், பிரதாப் சிங், வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.நகரஇளைஞரணி அமைப்பாளர் எம்.ஆல்வின் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச் செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது: 5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என பதவி வகித்து தமிழக மக்களை குறிப்பாக சிறுபான்மையின மக்களையும், ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க சட்டத்தை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். மாநில சுயாட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என முழங்கியவர் தலைவர் கலைஞர், ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுகவினர் மத்தியஅரசு கொண்டு வரும் சட்டங்களை ஏற்று பாஜகவின் கைப்பாவையாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றனர். 

ஊழலின் ஓட்டுமொத்த உறைவிடமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. எமர்ஜென்சி காலத்தில் பெருந்தலைவர் காமராஜரை கைதுசெய்ய சொன்னபோது அதை மறுத்தவர் தலைவர் கலைஞர். சுதந்திர காற்றை உங்களது ஆட்சியில்தான் சுவாசிக்க முடிகிறது என்று அன்று சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர். அப்படிப் பட்ட தலைவரின் 95-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றோம். பல பிரதமர்களை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். அப்பேற்பட்ட தலைவரைத்தான் காங்கிஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி தன்னுடைய தந்தையாக பாவித்தார் என்றால் அது மிகையாகாது.

2019-இல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மத்திய அரசில் அமைச்சராக பங்கேற்று தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.குறிப்பாக நாசரேத்தில் இருந்த திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் புதிய தொழிற்சாலை கொண்டு வந்து நாசரேத் பகுதி வளம் காணச் செய்வார். தமிழகத்திலுள்ள 234 தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டு வரும் திமுக செயல் தலைவரை தமிழக முதல்வராக அரியணையில் அமரச்செய்ய தலைவர் கலைஞர் 95-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இந்த நாளில் உறுதி ஏற்போம் என பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், தலைமைக்கழகப் பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி, செந்தூர் பாலகிலகிருஷ்ணன், நெல்லை ரவி ஆகியோர் பேசினர். திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் ஜனகர், இராமஜெயம், இ.அனஸ், மாவட்ட திமுக மாநில துணைச் செயலாளர் ஏ.ஜே. தம்பு என்ற அருண் சாமுவேல், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ், முருகத்துரை, அன்பு தங்கபாண்டியன், சாமுவேல், ஒன்றியபிரதிநிதிகள் காந்தி, சுப்பிரமணியம், உடையார், வார்டு செயலாளர்கள் கருத்தையா, ஜாண் ஞானதாஸ், சிமியோன், சீனிவாசன், முன்னாள் வார்டு கவுன்சிலர் உத்திரக்குமார், மேலவெள்ளமடம் ஜெயவீரன், எஸ்.டி.பி.தாமரைச்செல்வன், கஸ்தூரிபாய், .நிக்சன், கஸ்தூரிபாய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட தொழில் நுட்ப ஒருங்கி ணைப்பாளர் பேரின்பராஜ் லாசர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

maniJul 14, 2018 - 02:13:49 AM | Posted IP 162.1*****

திமுக கூட்டணி வேட்பாளர் தான்.....திமுக வேட்பாளர் அல்ல....நோட் திஸ் point

ஸ்.sivaramanJul 13, 2018 - 08:35:35 PM | Posted IP 162.1*****

ஏன் அண்ணா.காமெடி.பண்றீங்க.

unmaiJul 13, 2018 - 02:23:11 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர்

தமிழன்Jul 13, 2018 - 01:18:01 PM | Posted IP 172.6*****

பகல் கனவு......

உண்மை தொண்டன்Jul 13, 2018 - 12:40:50 PM | Posted IP 172.6*****

கனிமொழி அக்காவா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Joseph Marketing


Anbu Communications

Black Forest Cakes


CSC Computer EducationThoothukudi Business Directory