» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நர்சிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

வெள்ளி 13, ஜூலை 2018 9:24:38 AM (IST)

தூத்துக்குடியில்  நர்சிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கணேசன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சரிதா. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பியபோது பிரையண்ட் நகர் பகுதியில் 2 வாலிபர்கள் இவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம்  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர் 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பிரையன்ட் நகரைச் சேர்ந்த சஜூ (22), லோகியா  நகரைச் சேர்ந்த வேல்முருகன் (21) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதில் சஜூ தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். வேல்முருகன் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals




Joseph Marketing




Thoothukudi Business Directory