» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன பொருட்களை அகற்ற குஜராத்தில் இருந்து டேங்கர் லாரிகள் வருகை!!

வெள்ளி 13, ஜூலை 2018 9:03:25 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன பொருட்களை அகற்ற குஜராத்தில் இருந்து பிரத்யேக டேங்கர் லாரிகள் தூத்துக்குடி வந்துள்ளன.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28ம் தேதி மூடப்பட்டது. பின்னர் அங்கு ஏற்பட்ட ரசாயன கசிவை அடுத்து அரசின் உயர்நிலைக்குழு ஆலையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி ஆலையில் உள்ள ரசாயனங்களை அகற்றும் பணி கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆலையில் மொத்தம் 5,100 100 டன் கந்தகஅமிலம், 3 ஆயிரத்து 100 டன் பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இதுவரை ஆலையில்இருந்து 3,225 டன் கந்தக அமிலம், 410.77 டன் பாஸ்பாரிக் அமிலம், 10 ஆயிரத்து 272 டன் ஜிப்சம், 1208.48 டன் ராக்பாஸ்பேட், 42.93 டன் ஹைட்ரோ புளுரோ சிலிசிக் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இது தவிர குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் ஐசோபுரோபைல் ஆல்கஹாலை வாங்கி உள்ளது. தற்போது மீண்டும் அதே நிறுவனத்திடம் அந்த ரசாயனத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரசாயன பொருட்களை அகற்ற குஜராத்தில் இருந்து பிரத்யேக டேங்கர் லாரிகள் தூத்துக்குடி வந்துள்ளன. இதையடுத்து அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது

இந்நிலையில் இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து குழு அறிவுறுத்தல் படி ரசாயனங்களை அகற்றும் பணி 30 நாளில் முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது இதன்படி ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதேப்போல் டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துக்ளோம். அப்பகுதியில் உள்ள கிரீன் பெல்ட் எனும் மரங்களை பாதுகாக்க மாநகராட்சி மூலம் கட்டணம் வசூலித்தி செடிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingNew Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory