» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை: பெண் கைது

வெள்ளி 13, ஜூலை 2018 8:52:38 AM (IST)

கோவில்பட்டி அருகே வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால், ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வாலம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புசாமி (50). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை ஒப்பந்த முறையில் கட்டிக் கொடுத்து வந்தார். கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி சண்முககனி (45). இவருக்கு கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் ஒப்பந்த முறையில் சுப்புசாமி வீடு கட்டினார். அந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில், சுப்புசாமிக்கு உரிய பணத்தை சண்முககனி கொடுக்க மறுத்து சுப்புசாமிக்கு அவர் கொலைமிரட்டல் விடுத்தாராம்.

இதனால் மனமுடைந்த சுப்புசாமி நேற்று முன்தினம் மாலையில் பாண்டவர்மங்கலத்தில் தான் சண்முககனிக்கு கட்டிய வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய், சப்–இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சுப்புசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, கடிதம் எழுதி தனது சட்டைப்பையில் வைத்து இருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். 

அந்த கடிதத்தில், ‘சண்முககனிக்கு வீடு கட்டியதற்கு அவர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், கொலைமிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சண்முககனிதான் காரணம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, சுப்புசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்ததாரருக்கு பணத்தை கொடுக்க மறுத்து, கொலைமிரட்டல் விடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சண்முககனியை கைது செய்தனர்.தற்கொலை செய்த சுப்புசாமிக்கு வேலம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing




New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory