» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் வேரோடு சாய்ந்த மரம்

வெள்ளி 13, ஜூலை 2018 8:47:29 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பழைமையான புங்கை மரம்  வேரோடு சரிந்து விழுந்தது.
 
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில், சிங்கப்பூர் கோவிந்த சாமி பிள்ளை கலையரங்கம் அருகே இருந்த பழைமையான புங்கை மரம்  நேற்று மாலை வேரோடு சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பக்தர்கள் மற்றும் வாகனங்கள் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இதே போல கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி இரவு திருக்கோயில் வளாகத்தில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கம் அருகே வேலவன் விடுதி முன்பிருந்த பழைமையான வேப்ப மரம் அடிப்பகுதியில் உடைந்து கிழே சரிந்து விழுந்தது.  ஜூன் 20-ஆம் தேதி கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபம் அருகிலிருந்து வேப்பமரத்தின் கிளை விழுந்ததில் 4 பெண்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கெனவே கட்டடம் இடிந்து விழுந்ததால் நிழலுக்காக பக்தர்கள் மரத்தடியில் தங்குகின்றனர். ஆனால் மரங்களும் இவ்வாறு அடிக்கடி விழும் சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முறிந்து விழுந்த மரக்கிளைகளை திருக்கோயில் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். திருக்கோயில் வளாகத்தில் மிகவும் பழைமைவாய்ந்த மரங்கள், கட்டடங்கள் குறித்து முழு ஆய்வு மேற்கொண்டு, அகற்றிடவும், சீரமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing


Thoothukudi Business Directory