» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்பு

வெள்ளி 13, ஜூலை 2018 8:40:11 AM (IST)

தூத்துக்குடியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சிசு சடலத்தை போலீசார்  நேற்று மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் கிடந்த அந்த பெண் சிசு சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அப்பகுதியினர், தென்பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அந்தச் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிசு அந்தப் பகுதியில் வீசப்பட்டு இரண்டு நாள்கள் இருக்கும் என்பதால் கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தென்பாகம் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsNew Shape Tailors


Joseph MarketingThoothukudi Business Directory