» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிராம உதவியாளர் பணிகளுக்கு நாளை நேர்முகத் தேர்வு : தகுதியின் அடிப்படையில் நியமனம் - வட்டாட்சியர்

வெள்ளி 13, ஜூலை 2018 8:06:45 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (ஜூலை 14) நடைபெற உள்ள 24 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு எவ்வித சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளதால் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் காலியாக உள்ள 24 கிராம உதவியாளர் பணியிடங்களை இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளது. இதன்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உள்பட்ட ஆறாம்பண்ணை, வல்லநாடு கஸ்பா, கொட்டாரக்குறிச்சி, விட்டிலாபுரம், தெற்குகாரச்சேரி, திருப்புளியங்குடி, சிவகளை, வல்லக்குளம் ஆகிய கிராமங்களுக்கு பொதுப் பிரிவிலும், செக்காரக்குடி-2, நட்டாத்தி, ஸ்ரீவைகுண்டம், தெய்வசெயல்புரம், கொங்கராயகுறிச்சி, ஆறுமுகமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு முஸ்லிம்கள் தவிர பிற்பட்ட வகுப்பினரும், வடவல்லநாடு கிராமத்தில் பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்களும், கீ.அப்பன்கோவில் தன்னூத்து, கீழ்பிடாகைகஸ்பா, கலியாவூர், இருவப்பபுரம்-2 ஆகிய கிராமங்களுக்கு பட்டியல் வகுப்பினர்களும், இருவப்பபுரம்-1, பத்மநாபமங்கலம், ஆதிச்சநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர்களும் இனசுழற்சி அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 5 ஆம் வகுப்பு தேர்ச்சி உள்ளிட்ட தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் வட்டாட்சியர் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. ஜூலை 14 ஆம் தேதி காலை 8 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணி மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. 24 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரம்புவதற்காக நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். 5 ஆம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை தகுதியாக கொண்ட கிராம உதவியாளர் பணியிடத்திற்கு உயர் கல்வித் தகுதியை கொண்டவர்களும் அதிகமான நபர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேர்முகத் தேர்வு குறித்து வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் கூறியது:ஜூலை 14 ஆம் தேதி நடைபெற உள்ள கிராம உதவியாளர்கள் நேர்முகத் தேர்வு முழுக்க முழுக்க தகுதி மற்றும் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் நியமனம் செய்யப்பட உள்ளதால் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.தகுதி மற்றும் விதிமுறைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மட்டுமே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் நடைபெறும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Anbu Communications

New Shape Tailors

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory