» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் பணியாளர்களுக்கு, வேலைவாய்ப்பு: ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் .

வியாழன் 12, ஜூலை 2018 10:14:06 PM (IST)ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து தனியார் நிறுவன நிறுவகத்தினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த சுமார் 3000 பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக www.thoothukudi.online என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. 

இதில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள் தங்களது சுய விபரங்கள் (Bio – Data) பதிவேற்றம் செய்து வருகின்றனர். பல்வேறு தனியார் நிறுவனத்தினரும், இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், பதிவேற்றம் செய்த நபர்களின் பயோ டேட்டாவை பார்த்து, தகுதி மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, தேவைப்படும் நபர்களை அவர்களாகவே தேர்வு செய்யும் வகையில் இந்த இணையதளதம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளும் இந்த இணையதளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், பயோ டேட்டாவை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மேலும், தனியார் நிறுவனத்தினரின் ஆட்கள் தேவைக்கேற்ப திறன் மேம்பாட்டு பயிற்சியும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அளிக்கப்பட உள்ளது. 

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை இணையதளத்தின் மூலம் பதிவு செய்து, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும், மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) முத்துமாதவன் மற்றும் பல்வேறு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph MarketingThoothukudi Business Directory