» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் அரிராகவன் வீட்டில் போலீஸ் சாேதனை

வியாழன் 12, ஜூலை 2018 5:49:29 PM (IST)தூத்துக்குடி கலவர வழக்குத் தொடர்பாக வழக்கறிஞர் அரிராகவன் இன்று மீண்டும் பாளை சிறையில் அடைக்கப்பட்டநிலையில் அவரது வீட்டில் விஏஓ மற்றும் தூத்துக்குடி சிப்காட் போலீசார் சோதனையிட்டனர்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22ஆம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. இதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்துவரும் நிலையில், கலவரம் தொடர்பான வழக்கில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து அவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிப்காட் போலீசார் தூத்துக்குடி ஜேஎம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இதையடுத்து வழக்கறிஞர் அரிராகவனை ஒருநாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்றுது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அரிவரராகவனை அவரை காவலில் எடுத்து சிப்காட் போலீசார் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கறிஞர் அரிராகவன் இன்று பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை துாத்துக்குடி முத்தம்மாள் காலனியிலுள்ள வழக்கறிஞர் அரிராகவன் வீட்டில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் போலீசார் மற்றும் விஏஓ திருவரங்கசெல்வி ஆகியோர் சோதனை நடத்தினர்.இதில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Joseph MarketingThoothukudi Business Directory